(தொடர்ச்சி...)
வி.கோ.சூவின் நூல்கள் மானவிஜயம், கமலாம்பாள் சரித்திரம், கலாவதி, ரூபாவதி, சிவனார் சரித்திரம், சித்திரக்கவி விளக்கம், தமிழ் வியாசங்கள் முதலியவை. தனித்தமிழ் எண்ணம் கொண்டவர் எவரும் இத்தகு பெயர்களைத் தம் நூல்களுக்கு வைக்க மாட்டார் அன்றோ? பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் யாரும், 'நான் கடவுள் அருளால் பாடல் புனைகிறேன்' என்று சொல்லத் துணிவாரா? ஆளுங்கட்சியர் எதிர்க் கட்சியைப் புகழ்தல் உண்டோ?
வி.கோ.சூவின் கருத்துகளையும் எழுத்து நடையையும் பார்த்தால் அவருடைய தனித்தமிழ் எண்ணத்தின் தன்மை விளங்கும். மறைமலையடிகள் செயல்கள் போன்று ஒரு சிறு செயலையும் செய்த அடையாளம் வி.கோ.சூவிடம் காணப்படவில்லை. தந்தை பெரியாரும் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டபின் அதற்கு உண்மையாய் இருந்தார். மதுவிலக்குக் கொள்கையை ஏற்றபின் தமக்குரிய தென்னை மரங்களை வெட்டச் செய்தார். 'சமண' மதஞ்சார்ந்தபோது திருநாவுக்கரசர் தம் பெயரை 'தருமசேனர்' என மாற்றிக்கொண்டார். வி.கோ.சூ. பரிதிமாற் கலைஞர் என்னும் பெயரைக் கூடத் தொடரவில்லையே! அவர் எழுதிய நூல்களின் நடையில் வடசொற்களை நீக்கி எழுதியதில்லை.
கால்டுவெல் ஆய்வுகள் தமிழின் தனித்தன்மையை வெளிப்படுத்திய பின் வாழ்ந்தவர் வி.கோ.சூ. வின்சுலோவும், சி.யூ. போப்பும் தனித்தமிழின் இயல்பை வெளிப்படுத்திய பின் வாழ்ந்தவர் வி.கோ.சூ. மறைமலையடிகள் இயக்கம் நடத்தியபோதும் அதன் வளர்விளைவுக் காலத்திலும் வாழ்ந்தவர் வி.கோ.சூ. சிறந்த நூற்பயிர்ச்சியும் எழுத்து ஆற்றலும் நிரம்பியவர் வி.கோ.சூ. கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் என்னும் பெரும் பொறுப்பில் இருந்தவர் வி.கோ.சூ. சொல்ஆய்விலும் வரலாற்றுஆய்விலும் ஈடுபாடுடையவர். எனினும் தனித்தமிழ் உணர்வுடன் அவர் சிறு பணியையும் செய்யவில்லை.
நீண்ட, அறிய தொடர்களமைத்து எழுதும் பழக்கமுடையவர். 'மொழி' என்பது தெரிந்தும் பாஷை என்னும் சொல்லையே பயன்படுத்தும் போக்கு எதைக் காட்டுகிறது? சாஸ்திரம், அங்கஜீவ, மனோதத்துவம், அசாத்தியம், பிரயோஜனம், பிராயிகம், விசேஷமாக, பிரபந்தம் என்னும் சொற்களையெல்லாம் பயன்படுத்தியது எதைக் காட்டுகிறது. இயலாமல், அறியாமல் பயன்படுத்துவது பொறுத்துக் கொள்ளக்கூடியது. இயன்றும் அறிந்தும் பயன்படுத்தவில்லை எனில் என்ன பொருள்? சில இடங்களில் நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி எழுதிய பழக்கம் அவர்க்குண்டு. அதனினும் பிறமொழிப் பெயரையே மாற்றி எழுதும் பழக்கம் அவரிடம் இருக்கிறது. பேராசிரியர் மாக்சுமுல்லரை 'மோட்சமூலப்பட்டாசாரியார்' என்றும், சேக்சுபியரை 'ஜெகப்பிரியர்' என்றும் அழைத்தார்.
"இனி, வேதாந்த சித்தாந்த சம்பந்தமாகிய யோக தத்துவ சாஸ்திரங்களிலே சோபான முறையில் (படிப்படியாய்க்) கூறப்படும் உண்மைகளின் பயனாகிய ஏகனாகிக் சிவசாயுச்சியம் அடைந்து ஆநந்தித்தலை ஆங்கில பாஷையிலுள்ள சாஸ்திரங்களை எல்லாம் கற்று ஏப்பமிட்ட 'ஹக்ஸ்லி' (Huxley) என்னும் சாஸ்திரி வெளித்தோற்றம் என்று உரைப்பார்".
இந்நடையில் அவரின் மூன்று வகை இயல்புகள் விளங்குகின்றன. அவரால் தனித்தமிழ் எழுதுதல் இயலும் என்பது ஒன்று. அவர் பிற சொற்களை நீக்க முயலவில்லை என்பது இரண்டாவது. தொல்காப்பியர் கூறிய, 'பிற மொழி எழுத்தை நீக்கி எழுதுக' என்பதைக் கடைப்பிடிக்கவில்லை என்பது மூன்றாவது.
தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக