(தொடர்ச்சி...)
வி.கோ.சூ பார்ப்பனர் என்பதற்காக யாரும் அவரைப் பழித்தல் சரியன்று. ஆனால், அப்படியிருந்தும் அவர் தமிழ்ப் பற்றிய சில உண்மைகளை மறைக்காமல் வெளிப்படுத்தியுள்ளார். தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை ஒப்புக் கொண்டிருந்தார், வி.கோ.சூ. ஆரியப் பார்ப்பனர் தமிழ்மொழி நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டு மூலத்தை அழித்துவிட்டனர் என்னும் உண்மைகளை எல்லாம் அவர் தம் நூல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது போன்ற பல செய்திகளுக்காக அவரைப் பாராட்டுவது நல்லது. ஆனால், அதற்காக 'தனித்தமிழ் முன்னோடி' எனப் பாராட்டுவது சரியாகிவிடாது.
தனித்தமிழ் முன்னோடி, தனித்தமிழ் அறிஞர், தனித்தமிழ்த் தொண்டர் என்றெல்லாம் யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளவியலாது.
அப்படிச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சில அடையாளங்கள் தேவை.
1. தனித்தமிழை உளமார விரும்புதல்.
அப்படி விரும்புபவரே தலையாய தமிழர் என்பார் பாவாணர். தனித்தமிழை விரும்புதல் என்பது என்ன?
2. தமிழே திரவிட மொழிகளுக்குத் தாய் என்று ஒப்புக்கொள்வது.
3. அதுவே ஆரியத்துக்கு மூலம் என ஏற்றுக்கொள்வது.
4. தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் அடிப்படையில் எழுதுவது.
இப்படிச் சில அடையாலங்களிருந்தால் அத்தகையவர் தலையாய தமிழர் என்பது பாவாணரின் இலக்கணம்.
'வடமொழியைப் பற்றி அவ்வறிஞரின் அணுகுமுறை யாது?' என்பதும் அவரைக் கண்டுகொள்ள உதவும்.
தமிழ் மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் காலந்தோறும் சில பகைவர்கள் இருக்கின்றனர். அவர்களுள் சிலரை நாம் மறக்கவே கூடாது. அவர்களை மறந்தும் மதித்தல் கூடாது.
சுப்பிரமணி தீட்சிதர், சாமிநாத தேசிகர் ஆகிய இருவரைக் கட்டாயம் அடையாலன்காட்டியே ஆகவேண்டும். அவர்களை ஓர் அறிஞர் பாராட்டுகிறாரா, எதிர்க்கிறாரா? என்று பார்ப்பது அவரைத் தெரிந்து கொள்ள உதவும். அவர்களைப் பாராட்டுபவர் எத்தகு சிறப்புடையவர் ஆயினும் அவர் தமிழுக்கு நலம் செய்ய மாட்டார் என்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
சுப்பிரமணிய தீட்சிதர்
'பிரயோக விவாகம்' என்னும் பெயரில் ஒரு தமிழ் நூல் எழுதியவர் சுப்பிரமணிய தீட்சிதர். அந்நூலில் அவர் கூறிய தமிழுக்கு எதிரான கருத்துகளை ௧௯௭௮(1978)இல் தனித்தமிழாளர் க. தமிழமல்லன் அவர்கள் தனித்தமிழ் என்னும் நூலில் வெளிப்படுத்திக் கண்டித்திருந்தார்.
சுப்பிரமணிய தீட்சிதரின் கருத்துகள்
1)"தமிழ் இலக்கணம் எல்லாம் பிராயிகம் வடமொழியிலக்கான வழியே ஆகும்."
இன்னச்சுக்கருத்தை வி.கோ.சூ. கண்டிக்கவில்லை. கண்டிப்பதற்கு மாறாக அதற்குத் துணையாகத் தம் கருத்துகளை ஒரு கட்டுரையில் அப்போது வெளிப்படுத்தியுள்ளார்.
"சுப்பிரமணிய தீட்சிதர் சொன்ன இக்கொள்கையின் உண்மையினை வடமொழி தேன்மொழியின் இயைபு" என்ற உபந்நியாசத்தில்(சொற்பொழிவில்) விரித்து இலக்கண தர்க்க சகிதமான யுக்தியோடு நியாயங்காட்டி ஊர்ஜித(உறுதி)ப் படுத்தியிருக்கிறோம்" என்று கூறுகிறார்.
2)'அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணிநீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரனங்கலே முதனூல்கள்."
அவருக்கு பரிதிமாற் கலைஞரின் பாராட்டு பின்வருமாறு :
"இவருடைய கலித்துறைகள் எல்லாம் 'இழுமெனுமொழியின்ஒழுகுறு மருவிபோற்' செவ்வனே அமைந்திருக்கின்றன. இவரின் காரிகைகளைப் படிக்கும்போதே யானந்தம் ஜனிக்கின்றது. காரிகையாள் இலக்கணம் எழுதுவதில் இவ்வளவு கைவந்தவர்கள் கிடைப்பது மிகவும் அருமை என்பது தேற்றம். இவர் உரை வகுக்கும் சாமர்த்தியமோ அற்ப்புதம்! அற்ப்புதம்!! அதிய யுக்தி பக்தியோடும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் அவருடைய தர்க்க சாஸ்திர வலிமை நன்கு வெளிப்படும்."
என்று வி.கோ.சூ. தீட்சிதரைப் பாராட்டுகிறார்.
அவர் கூறியுள்ள இன்னொரு நச்சுக்கருத்தையும் மறுக்காமலும் கண்டிக்காமலும் வி.கோ.சூ. வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நச்சுக்கருத்து என்ன?
இவ்வந்தணர் சிகாமணி (சு,ம. தீட்சிதர்) அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணீநீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரனங்களை முதநூலேன உரைப்பவர்.
இப்பிடிச் சொல்லும் வி.கோ.சூ. தனித்தமிழ் முன்னோடியா?
இயல்பான தமிழ் உணர்வுடையவர்கள் தொல்காப்பியத்தை உயர்வாகத்தான் பேசுவார்கள். அதை இழிவு படுத்தியவர் சு.ம. தீட்சிதர். அவரைப் போற்றும் வி.கோ,சூவை எப்படி அழைப்பது? யாரும் தொல்காப்பியரை மாற்றுப் பெயரால் அழைக்க மாட்டார்கள். ஆனால் நம் வி.கோ.சூ. தொல்காப்பியரை 'திரண தூமாக்கினி மகாருஷி' என்று அன்பு வணங்க அழைத்து மகிழ்கிறார்.
'தொல்காப்பியர்' என்னும் நல்ல பெயர் இருக்கும்போது அதையே மாற்றி தம் நூலில் வழங்குபவரைத் தனித்தமிழ் முன்னோடி எனக் கூறலாமா?
தொடரும்...

2)'அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணிநீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரனங்கலே முதனூல்கள்."அவருக்கு பரிதிமாற் கலைஞரின் பாராட்டு பின்வருமாறு :