இந்தியாவின் முழு ஆட்சியைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டு "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று பேசக்கூடிய கட்சியாக இருந்தது, பேராயக் கட்சி.
அதன் தலைவர்கள் நேரு முதல் காமராசர் வரை கழகத்தை கேலியும் கிண்டலும் செய்து இளக்காரமாக பேசி வந்தனர்.
அப்போது அண்ணா சொன்னார்
"பேராயக் கட்சி கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்; நாமோ கொட்டி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள். கோபுரம் ஒரு காலத்தில் வீழும். செங்கற்கள் ஒரு காலத்தில் கோபுரமாக உயரும்."
இவ்வாறு அண்ணா சொல்லியது போலவே பிற்காலத்தில் பேராயக் (காங்கிரசு) கோபுரம் வீழ்ந்ததும் உண்டு. கழகச் செங்கற்கள் கோபுரமாக உயர்ந்ததும் உண்டு.
1957இல் நடந்த பொதுத் தேர்தலில் முதன் முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது.
தமது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிடுகிறார்.
அண்ணா அவர்களை எதிர்த்து மரு. பி. எசு. சீனிவாசன் என்பவரைப் பேராயக் கட்சி நிறுத்தி போட்டியிடுகின்றது.
அண்ணா அவர்களை ஆதரித்து ஏ. இராமசாமி (முதலியார்), காயிதே மில்லத் முகம்மது இசுமாயில், கலைவாணர் என். எசு. கிருட்டிணன், என். சிவராசு உட்பட பெருமக்கள் பலரும் பரப்புரை செய்கிறார்கள்.
மரு. சீனிவாசனுக்குத் துணையாகத் தந்தைப் பெரியார் உட்பட திராவிடர் கழகத்தினரும், காமராசர் உள்ளிட்ட பேராயத்தாரும் தீவிரமாக பரப்புரை செய்கிறார்கள்.
கீழ்த்தரம்
இந்தக் கட்டத்தில் காஞ்சியில் ஒரு சுவரில் அண்ணா அவர்களைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி எழுதி வைத்திருந்தார்கள். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் கொதித்தெழுந்தனர். அண்ணா அவர்களிடம் சென்று, " பார்த்தீர்களா அண்ணா, இந்தப் படு தீய செயலை? உங்களையே இழிவு படுத்தி எழுதியவரின் கையை வாங்காமல் விடமாட்டோம்" என்றெல்லாம் பதறினார்கள். அந்தச் சுவர் எழுத்தை அழிக்கச் சிலர் விரைந்தனர்.
அவர்கள் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா அவர்கள், கழகத் தோழர்களைப் பார்த்து , " சினப்பட வேண்டாம். அமைதியாக இருங்கள். இதுவும் நமக்கு நல்லதுதான். அந்தச் சுவர் எழுத்து இரவிலும் நன்றாகத் தெரியும் வண்ணம் அங்கே ஒரு 'ஆவி' விளக்கைத் தொங்கவிட்டு, 'விளக்கு நன்கொடை அண்ணாதுரை' என்று எழுதி வையுங்கள்" என்றார் அண்ணா; அப்படியே செய்தனர்.
அந்த வழியே போவோர் வருவோரெல்லாம் நின்று அதனைப் படித்துப் பார்த்துவிட்டு 'எந்தப் பாவி அண்ணாவைப்பற்றி இப்படி எழுதி வைத்திருக்கிறான்?" என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றனர்.
எழுதியவனும்,எழுதச்சொன்னவர்களும் வெட்கித் தலை குனிந்தனர். இந்த நிகழ்ச்சியும் அண்ணா வெற்றிக்குத் துணை செய்தது எனலாம்.
"ஏட்டிக்குப் போட்டி, மறுப்புக்கு மறுப்பு, அடிக்கு அடி, உதைக்கு உதை, பேச்சுக்குப் பேச்சு, ஏச்சுக்கு ஏச்சு" என்பனவெல்லாம் அரசியலில் வளர்ந்துவிட்ட போக்கு.
அந்தப் போக்கினை அண்ணா அவர்கள் என்றுமே விரும்பியது இல்லை.
"நாம், மாற்றாரின் கருத்துக்கு மறுகருத்தை எடுத்து வைக்க வேண்டுமேயொழிய தடிக்கம்பு அரசியல் நடத்த முற்படக் கூடாது" என்பார் அண்ணா.
"வேட்டு முறை நமக்கு வேண்டாம்; ஒட்டு முறைதான் நமக்கு தேவை" என்று அடிக்கடி எடுத்துச் சொல்லி வந்தார்.
வளரும்.....
அதன் தலைவர்கள் நேரு முதல் காமராசர் வரை கழகத்தை கேலியும் கிண்டலும் செய்து இளக்காரமாக பேசி வந்தனர்.
அப்போது அண்ணா சொன்னார்
"பேராயக் கட்சி கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்; நாமோ கொட்டி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள். கோபுரம் ஒரு காலத்தில் வீழும். செங்கற்கள் ஒரு காலத்தில் கோபுரமாக உயரும்."இவ்வாறு அண்ணா சொல்லியது போலவே பிற்காலத்தில் பேராயக் (காங்கிரசு) கோபுரம் வீழ்ந்ததும் உண்டு. கழகச் செங்கற்கள் கோபுரமாக உயர்ந்ததும் உண்டு.